என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அஜித் தோவல்
நீங்கள் தேடியது "அஜித் தோவல்"
அஜித் தோவலின் மகன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #JairamRamesh #AjitDoval #VivekDoval
புதுடெல்லி:
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல், கேமன் தீவுகளில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதலீடுகளில் சந்தேகம் இருப்பதாகவும், ‘தி கேரவன்’ இதழில் கடந்த ஜனவரி மாதம் கட்டுரை வெளியானது. இதனை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
இவ்வழக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பெருநகர நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால் முன்பு விசாரணைக்கு வந்தது. கவுசல் சரோப், பரேஷ் நாத் ஆகியோர் ஆஜராகினர். ஜெய்ராம் ரமேஷ் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆஜரானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் மே 9-ம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்ராம் ரமேஷ், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி சமர் விஷால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 20 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 27-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்படும். #JairamRamesh #AjitDoval #VivekDoval
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல், கேமன் தீவுகளில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதலீடுகளில் சந்தேகம் இருப்பதாகவும், ‘தி கேரவன்’ இதழில் கடந்த ஜனவரி மாதம் கட்டுரை வெளியானது. இதனை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை விவேக் தோவல் மறுத்தார். அத்துடன், கட்டுரை எழுதிய கவுசல் ரோப், கட்டுரை வெளியிட்ட கேரவன் ஆசிரியர் பரேஷ் நாத், கட்டுரையை சுட்டிக்காட்டி செய்தியாளர் சந்திப்பு நடத்திய ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்றத்தில், விவேக் தோவல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்ராம் ரமேஷ், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி சமர் விஷால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 20 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தார்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 27-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்படும். #JairamRamesh #AjitDoval #VivekDoval
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது கூறிய குற்றச்சாட்டை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட 7 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தேசிய பாதுகாப்புத்துறை விளக்கம் கூறியுள்ளது. இதில், ‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க சொன்னது அன்றைய வாஜ்பாய் அரசின் முடிவாகும். இந்த முடிவு விமானத்தில் பயணம் செய்த 161 பயணிகளின் பாதுகாப்பினை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். மசூத் அசாரின் விடுதலைக்காக எடுக்கப்படவில்லை. இந்த முடிவு நல்லதோ கெட்டதோ அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிடுத்து அரசின் முடிவுகளை செயல்படுத்திய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேசுவது சரியானதல்ல. மேலும் அஜித் தோவல் மசூத் அசாருடன் விமானத்தில் பயணித்ததாக கூறியது தவறான தகவல் ஆகும்’ என தெரிவித்துள்ளது. #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar

ராகுல் காந்தி பேசுகையில் ‘கடந்த 1999ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க வேண்டி , இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. அப்போது 161 பயணிகள் பயணம் செய்தனர். புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சிறையிலிருந்து யார் விடுவித்தது. எந்த கட்சி விடுவித்தது? என சற்றே சிந்தித்து பாருங்கள். முந்தைய பாஜக அரசும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜி்த் தோவலும் சேர்ந்து, விமானத்தில் மசூத் அசாரை அழைத்துச் சென்று, கந்தகாரில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். புல்வாமா தாக்குதலுக்கு அஜித் தோவல் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார்’ என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு தேசிய பாதுகாப்புத்துறை விளக்கம் கூறியுள்ளது. இதில், ‘ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க சொன்னது அன்றைய வாஜ்பாய் அரசின் முடிவாகும். இந்த முடிவு விமானத்தில் பயணம் செய்த 161 பயணிகளின் பாதுகாப்பினை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும். மசூத் அசாரின் விடுதலைக்காக எடுக்கப்படவில்லை. இந்த முடிவு நல்லதோ கெட்டதோ அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அதைவிடுத்து அரசின் முடிவுகளை செயல்படுத்திய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேசுவது சரியானதல்ல. மேலும் அஜித் தோவல் மசூத் அசாருடன் விமானத்தில் பயணித்ததாக கூறியது தவறான தகவல் ஆகும்’ என தெரிவித்துள்ளது. #Rahulgandhi #Congressboothworkers #AjitDoval #MasoodAzhar
×

X